உடைந்தது தேசியவாத காங்கிரஸ்.. சரத் பவார் தம்பி அஜீத்.. துணை முதல்வராக பதவியேற்பு!

Jul 02, 2023,02:58 PM IST
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைந்தது போல தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைந்துள்ளது. பாஜக அரசுடன் சரத் பவாரின் தம்பி அஜீத் பவார் கை கோர்த்து துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

பாஜக முகாமுக்கு அஜீத் பவார் தாவுவது இது முதல் முறையல்ல. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் ஆட்சியமைக்க தயாரானபோது கட்சியை உடைக்க முயன்று பாஜக பக்கம் போனவர்தான் அஜீத் பவார். ஆனால் போன வேகத்திலேயே மீண்டும் தேசியவாத காங்கிரஸுக்கே திரும்பி வந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பாஜக பக்கம் தாவியுள்ளார். சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சரத் பவாரின் மகள் சுப்ரியூ சூலேவும், பிரபுல் படேலும் நியமிக்கப்பட்டார்கள். அஜீத் பவாருக்கு எந்தப் பதவியும் தரப்படவில்லை. இதனால் அவர் ஆத்திரமடைந்தார். ஆனாலும் அமைதி காத்து வந்தார்.



இந்த நிலையில்தான் இன்று திடீர் திருப்பமாக மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) - பாஜக கூட்டணி அரசில் இணைந்துள்ளார் அஜீத் பவார். துணை முதல்வராக அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு 20க்கும் மேற்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அஜீத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளதன் மூலம் மகாராஷ்டிராவில் 2வது முறையாக ஒரு பெரிய கட்சி உடைந்துள்ளது. முதலில் சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே மூலம் சிலரை வெளியே இழுத்து அவரை முதல்வராக்கியது பாஜக. தற்போது தேசியவாத காங்கிரஸை உடைத்து அஜீத் பவாரை துணை முதல்வராக்கியுள்ளது.

இந்த விவகாரம் மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பாஜகவுக்கு எதிராக சரத் பவார் தீவிரமாக பணியாற்றுவதில்லை. அதானியைக் கூட புகழ்ந்துதான் பேசி வருகிறார். அப்படி இருந்தும் அவரது கட்சி உடைக்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரத்பவாரின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்