விடாமுயற்சி... அசத்தல் போட்டோவுடன் வந்த லேட்டஸ்ட் அப்டேட்!

Jun 04, 2023,11:03 AM IST
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிக்கும் அவரின் 61 வது படத்தை டைரக்டர் மகிழ்திருமேஜி இயக்க போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் சுபாஷ்கரன் தயாரிக்க உள்ளார். அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் டைட்டில், ஸ்பெஷல் போஸ்டருடன் அஜித்தின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது.

இதன் லேட்டஸ்ட் அப்டேட்டாக, விடாமுயற்சி படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக அஜித்தும், மகிழ்திருமேனியும் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்கள் ஏர்போர்டில் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளன.இந்த பிரம்மாண்ட படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளதாம். 




விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில வாரங்களில் துவங்கப்பட உள்ளதாம். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். 

இந்த ஆண்டு இறுதியில் அஜித் உலகம் முழுவதும் பைக் டூர் கிளம்ப போகிறார். அதற்கு முன் இந்த படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். விடாமுயற்சி படத்தை முடித்த கையோடு அஜித் துவங்க உள்ள பைட் டூரும் படமாக்கப்பட உள்ளதாம். இந்த பைக் டூர் டாக்குமென்ட்ரியாக தயாரிக்கப்பட்டு, நெட்ஃபிளிக்சில் தொடராக வெளியிடப்பட உள்ளதாம்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்