ரூ. 2000 நோட்டுக்களை வீட்டில் இருந்தபடி மாற்ற அமேசானின் சூப்பர் ஆஃபர்!

Jun 22, 2023,09:32 AM IST

டெல்லி :  ரூ. 2000 நோட்டுக்களை இருந்த இடத்திலிருந்தே மாற்றிக் கொள்ள அமேசான் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

உயர் பணம் மதிப்பு அளவு கொண்ட ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. 2016 ம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்பட உள்ளதாகவும், மக்கள் தங்களிடம் உள்ள 2000 நோட்டுக்களை செப்டம்பர் 30 ம் தேதிக்குள் வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.



இதனால் பல நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2000 நோட்டுக்களை வாங்க மறுத்து வந்தன. இதனால் பல சர்ச்சைகளும், குழப்பங்களும் ஏற்பட்டது. இந்நிலையில் தங்களின் வாடிக்கையாளர்கள் ரூ.2000 நோட்டுக்களை வீட்டில் இருந்த படியே மாற்றிக் கொள்ள அமேசான் இந்தியா நிறுவனம் செம ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.

* அமேசானில் கேஸ் ஆன் டெலிவரி ஆப்ஷனை பய���்படுத்துபவர்கள், டெலிவரி ஏஜன்டிடம் ரூ.2000 நோட்டுக்களை கொடுத்து, பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

* நீங்கள் வாங்கிய பொருளுக்கான தொகை போக கூடுதலாக ரூ.2000 நோட்டுக்களை மாற்ற வேண்டும் என்றாலும் மாற்ற முடியும். வீட்டிற்கு வரும் டெலிவரி ஏஜன்ட்டிடம் 2000 நோட்டுக்களை கொடுத்தால், அதற்கு இணையான தொகை உங்களின் அமேசான் பே பேலன்ஸ் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.

* பே பேலன்சில் நீங்கள் கொடுக்கும் மொத்த தொகையும் சேர்ந்து விட்டதா என்பதை சரி பார்த்த பிறகு, டெலிவரி ஏஜன்ட்டிடம் கையில் பணம் கொடுத்தால் போதும்.

* இந்த வாய்ப்பு கேஸ் ஆன் டெலிவரி ஆப்ஷனை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 

* இந்த ஆஃபரை பெறுவதற்கு வங்கி கணக்கு விபரம், அமேசான் மெம்பர்ஷிப் போன்ற ஏதும் தேவையில்லை. அதே சமயம் கேஒய்சி அவசியம்.

* ஒரு மாதத்திற்கு ரூ.50,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை இந்த முறையில் வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளலாம். அந்த தொகை அனைத்தும் வாடிக்கையாளர்களின் அமேசான் பே பேலன்ஸ் அக்கவுண்டிற்கு மாற்றப்பட்டு விடும்.

* ரூ.50,000 க்கும் அதிகமான, ரூ.5 லட்சம் வரையிலான தொகையை வாடிக்கையளர் மாற்றினால் அந்த தொகை அமேசான் பே வாலட்டிற்கு மாற்றப்படும்.

* அமேசான் பே பேலன்ஸ் மற்றும் அமேசான் வாலட்டில் உள்ள பணத்தை யூபிஐ மூலம் மற்ற நிறுவன சேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்