"மோடிதான் பாஸ்".. ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்..  சிட்னியைக் கலக்கிய நரேந்திர மோடி!

May 23, 2023,03:14 PM IST

சிட்னி:  சிட்னியில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான கூட்டத்தில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ், பிரதமர் நரேந்திர மோடியை பாஸ் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

சிட்னி சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அங்கு நடைபெற்ற இந்தியர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார். அங்குள்ளகுடோஸ் பாங்க் ஏரினா அரங்கில் 20,000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த கூட்டத்தில் மோடி பேசினார். அவருடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனீஸும் கலந்து கொண்டார்.



தொடக்க உரையாற்றிய ஆல்பனீஸ் கூறுகையில், இதே அரங்கில்  கடைசியாக ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அவரை எல்லோரும் பாஸ் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் அவருக்குக் கூட இப்படி ஒரு கூட்டம் கூடவில்லை. அப்போது கூடியதை விட இப்போது மிகப் பெரிய உற்சாகத்துடன் நீங்கள் கூடியுள்ளீர்கள். மோடிதான் இங்கு பாஸ்! என்றார் ஆல்பனீஸ்.

முன்னதாக மோடியும், ஆல்பனீஸும் கூட்ட அரங்குக்கு வந்தபோது இந்தியர்கள் பெரும் உற்சாகத்துடன் இருவரையும் வரவேற்றனர். இந்திய கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  பாரம்பரியமான முறையில் இரு பிரதமர்களும் வரவேற்கப்பட்டனர்.

முன்னதாக இரு பிரதமர்களும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது ஆல்பனீஸ் கூறுகையில், நான் பிரதமராக பதவியேற்ற பின்னர் நாம் 6வது முறையாக சந்திக்கிறோம். இது நமது நாடுகள் குறித்த உறவில் நாம் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. இந்தியா உலகின் 3வது பெரும் பொருளாதார வல்லரசாக உயரும். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக ஏற்கனவே இந்தியா திகழ்கிறது.  இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கியமான நாடு இந்தியா. இந்தியாவுடன் உறவை வலுப்படுத்திக் கொள்வதில் ஆஸ்திரேலியா ஆர்வமாக உள்ளது என்றார் ஆல்பனீஸ்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்