டக்குன்னு கையைத் தூக்கிய நியூஸ் ரீடர்.. அடுத்து நடந்த காமெடி.!

May 06, 2023,10:32 AM IST
லண்டன்: பிபிசி செய்தி வாசிப்பாளர் ஒருவர் லைவ் நியூஸ் வாசிப்பின்போது திடீரென கையை மேலே தூக்கிய செயல் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிவியில் செய்தி வாசிப்போருக்கு இதுபோன்ற காமெடியான அனுபவங்கள் நிறையவே இருக்கும். முன்பு தூர்தர்ஷன் செய்தி வாசிப்பின்போது அப்போதைய பிரபல நியூஸ் ரீடர் ஷோபனா ரவி பலமுறை இதுபோன்ற சம்பவங்களை சந்தித்துள்ளார். வாசித்துக் கொண்டே இருப்பார். டெலி பிராம்ப்டர் சரியாக ஓடாது.. இதனால் அவரது செய்தி வாசிப்பு தடங்கலாகும்.. அப்படியே கொஞ்சம் முறைத்து விட்டு தாளைப் பார்த்து படிக்க ஆரம்பிப்பார். அடிக்கடி இப்படி நடக்கும்.



இந்த நிலையில் பிபிசி செய்தி வாசிப்பாளர் லூக்வெசா புராக் என்ற பெண் நியூஸ் ரீடருக்கு ஒரு சங்கடமான அனுபவம் நடந்துள்ளது. கலகலப்பான  சில நொடி தவறு இப்போது வைரலாகி விட்டது. அவர் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கிளிப்பிங் காட்டப்பட்டது . சில விநாடிகளே ஓடிய அந்த கிளிப்பிங் முடிந்ததும் சட்டென்று கேமரா லூக்வெசாவை நோக்கி திரும்பியது. ஆனால் அவரோ  தனது கைகளை உயர்த்தி  நெட்டி முறித்துக் கொண்டிருந்தார். 

தன் பக்கம் திடீரென கேமராதிரும்பியதை எதிர்பாராத அவர் டக்கென்று கைகளை கீழே இறக்கி விட்டு விட்டு அமைதியில் உறைந்தார். சில  விநாடிகள் அவர்செய்தியே வாசிக்கவில்லை. ஸ்தம்பித்துப் போனது போல  அமர்ந்திருந்தார். அதன் பின்னர் மெளனம் கலைந்து செய்தியை வாசிக்கத் தொடங்கினார். இந்த சில விநாடி கலகலப்பு இப்போது வைரலாகி விட்டது. இந்த சம்பவம் குறித்து லூக்வெசா ஒரு டிவீட் போட்டுள்ளார்.

அந்த டிவீட்டில்,  தேங்க்யூ நண்பர்களே, உடன் பணி புரிவோரே, அத்தனை பேரும் வீடியோவைப் பார்த்து மகிழந்துள்ளர்கள்.. நன்றி என்று கூறியுள்ளார் லூக்வெசா. நெட்டிசன்கள் பலரும் லூக்வெசாவின் கிண்டலடிக்காத வகையில் கலாய்த்துள்ளனர். பலர் ஜாலியான கமெண்ட் போட்டுள்ளனர். அவற்றுக்கும் பதில் கொடுத்துள்ளார் லூக்வெசா. அதேசமயம் தனது தவறை லூக்வெசா சாதுரியமாக சமாளித்ததை பலரும் பாராட்டியுள்ளனர்.

ஏன்டா கையைத் தூக்குனது ஒரு குத்தமாடா?? (அப்படின்னு லூக்வெசாவின் மைன்ட் வாய்ஸ் பேசியிருக்கும்)

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

மக்கள் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த.. நிவேதிதா அம்மையார்!

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்