கர்நாடக சட்டசபைத் தேர்தல்... "இணை பொறுப்பாளர்".. அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு!

Feb 04, 2023,03:38 PM IST
புதுடில்லி : கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பாஜக தலைமை அறிவித்துள்ளது. 



கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் 2023 ம் ஆண்டு மே மாதம் நிறைவடைய உள்ளது. இதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதத்திற்கு முன் நடத்தப்பட உள்ளது. தேர்தல் தெடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரும் என்பதால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை துவக்கி வருகின்றன.

கர்நாடக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பதானை பாஜக தலைமை நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே கர்நாடகாவில் நடந்த பல சட்டசபை தேர்தல்களின் போது கட்சியின் பொறுப்பாளராக செயல்பட்டுள்ளார். இதனால் இந்த முறையும் அவரே பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

2011 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை கரூர் மாவட்டத்தில் பணியாற்றி உள்ளார்.  இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர், உடுப்பி போன்ற மாவட்டங்களில் எஸ்பி.,யாக பணியாற்றி உள்ளார். பெங்களூரு தெற்கு டிசிபி.,யாகவும் இருந்துள்ளார். 2019 ல் தனது போலீஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, அரசியலில் இணைந்தார். 2020 ல் பாஜக.,வில் இணைந்த இவருக்கு 2021 ஜூலை மாதத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

கர்நாடகா அரசியல் மற்றும் சட்ட விவகாரங்கள், மக்கள் குறித்து நன்றி தெரிந்தவர் என்ற வகையில் அண்ணாமலையை தேர்தல் இணை பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது. கர்நாடக தேர்தல் இணை பொறுப்பாளர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹச்.ராஜா, அண்ணாமலைக்கு ட்விட்டர் மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்