ஈரோடு இடைத்தேர்தல்.. அதிமுக.,விற்கு பாஜக ஆதரவு

Feb 07, 2023,02:43 PM IST
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம் என பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு தேர்தலில் அதிமுக.,விற்கு பாஜக.,விற்கு ஆதரவு அளிப்பது உறுதியாகி உள்ளது.



ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவிற்கு பாஜக தனது முழு ஆதரவை தெளிவித்துக் கொள்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

ஆளுங்கட்சியின் அராஜகங்களை, ஊழல்களை, அத்துமீறல்களை,  மக்கள் விரோத போக்கை, கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல், திணறிக் கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசை, வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும்  நாம் அனைவரும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேடவ்பாளர் கே.எஸக.தென்னரசு அவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். குறிப்பாக பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும்.

இந்த இடைக்கால வெற்றி வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும் வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம் அளவின்றி குவிந்திருக்கும் பணபலம் என்ற எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும் மக்கள் பலத்துடன் நாம் மனதார உழைக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டிக் கொள்கிறேன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக களம் காணும் கே.எஸ்.தென்னரசுக்கு நல்வாழ்த்துக்களையும் பாஜகவில் நல்லாதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்