நாங்களும்  கூட்டம் போடுவோம்.. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பாஜக.,வின் செம மூவ்

Jul 17, 2023,11:39 AM IST
டெல்லி : எதிர்க்கட்சிகள் இன்று பெங்களூரில் கூட்டம் போடும் நிலையில் நாளை டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் கூடவுள்ளது.

இந்த வாரம் முழுவதும் நாடே பரபரப்பான அரசியல் சூழலை எதிர்நோக்கி உள்ளது. பாஜக.,வை வீழ்த்துவதற்காக நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒரு அணியாக திரள ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றன. முதல் கூட்டம் பாட்னாவில் நடத்தப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் இன்று பெங்களுருவில் நடக்கிறது.

இன்று எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன. எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனை கூட்டம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு எதிராக தங்கள் பலத்தை நிரூபிக்க பாஜக.,வும் முடிவு செய்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 30 கட்சிகளையும் அழைத்து, ஜே.பி.நட்டா தலைமையில் ஜூலை 18 ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. 

ஜூலை 20 ம் தேதி பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது. இதற்கு முன் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை நீக்கி, ஒரே அணியில் ஒன்று பட எதிர்க்கட்சிகள் தீரவிம் காட்டி வருகின்றன். ஆனால் எதிர்க்கட்சிகளை மிரள வைப்பதற்காக பிரம்மாண்ட கூட்டத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் நட்டா தலைமையில் நடக்கும் இந்த கூட்டம் டெல்லி அசோக் ஓட்டலில் செவ்வாய்கிழமை மாலை நடக்கிறது. 

பாஜக நடத்தும் இந்த கூட்டத்தில் லோக் ஜனசக்தி, இந்துஸ்தான் ஆவாமி மோர்சா, ராஷ்டிரிய லோக் சம்த கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன. பாஜக கூட்டணியில் தற்போது அதிமுக, சிவசேனா, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைந்துள்ளதால் அவர்களும் பாஜக.,வில் இணைந்துள்ளனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்க அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். அதேபோல இன்றைய பெங்களூர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்