அமைச்சர் செந்தில் பாலாஜியை "டிஸ்மிஸ்" செய்த ஆளுநர்.. "அதிகாரம் இல்லை".. ஸ்டாலின் பதிலடி!

Jun 29, 2023,08:29 PM IST

சென்னை : தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி அதிரவு உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.  இது பெரும் சர்ச்சைகளையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது.


அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இதை சட்டப்படி சந்திப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.


தமிழக மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் வீடு, அவருக்கு சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் அமலாக்கத்துறை சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது. சென்னை, கரூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள செந்தில் பாலாஜியின் உறவினர், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரைணக்காக கைது செய்து அழைத்துச் சென்றது.




விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு காவலில் வைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததால் டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் சமீபத்தில் அவருக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இதற்கிடையில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை அடுத்து, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகள் தங்கம் தென்னரசு உள்ளிட்டோருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இருந்தாலும் செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரவையில் தொடர்வார் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்றம், ஒருவர் 2 ஆண்டு தண்டனை பெற்றால்தான் பதவி நீக்கம்  செய்ய முடியும் என்று கூறியிருந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநர் ரவி திடீரென செந்தில் பாலாஜியை நீக்கியுள்ளார்.


ஆளுநர் திடீர் நடவடிக்கை:


இன்று (ஜூன் 29) தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக கவர்னர் ரவி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி தவறாக பயன்படுத்தி உள்ளார். செந்தில் பாலாஜி மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது என அமலாக்கத்துறையின் உத்தரவையும் சுட்டிக்காட்டி, கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


ஸ்டாலின் பதிலடி:


தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி கவர்னர் பிறப்பித்த உத்தரவு பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அமைச்சரை நீக்குவதற்கு கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.


ஆளுநரின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்