மக்களே இதைக் கவனிங்க.. ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் பேங்க் லீவு வருது!

Jul 23, 2023,03:40 PM IST
டில்லி : ஆகஸ்ட் மாதம் செய்து கொள்ளலாம் என பேங்க் வேலை ஏதாவது மிச்சம் வச்சிருக்கீங்களா? அப்படின்னா இந்த தகவல் கண்டிப்பாக உங்களுக்கு தான். இதெல்லாம் கண்டிப்பா நீங்கள் மனசுல வச்சுக்கணும்.

ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் செயல்படாது. இரண்டாவது சனிக்கிழமை, நான்கு சனிக்கிழமைகள், 4 ஞாயிற்று கிழமைகள், சுதந்திர தினம், பார்சி புத்தாண்டு, ரக்ஷா பந்தன் என மொத்தமாக ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

அதனால் ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த தேகளில் வங்கிகள் செயல்படாது என முதலில் தெரிந்து கொண்டு உங்களின் வேலைகளை பிளான் செய்து கொள்ளுங்கள். நாடு முழுமைக்கும் இவை பொதுவான விடுமுறை கிடையாது.. அதேசமயம், வங்கிகளின் செயல்பாட்டு நிலவரத்தை அறிய இது உதவும்.




ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறைகள் :

ஆகஸ்ட் 08 - செவ்வாய் கிழமையில் கேங்டாக் மண்டல வங்கிகள் செயல்படாது.
ஆகஸ்ட் 12 - 2வது சனிக்கிழமையில் வங்கிகள் விடுமுறை
ஆகஸ்ட் 13 - ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை
ஆகஸ்ட் 15 - நாட்டின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள வங்கிகள் செயல்படாது.
ஆகஸ்ட் 16 - பர்சி புத்தாண்டை முன்னிட்டு பேலாபூர், மும்பை, நாக்பூர் மண்டல வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 18 - ஸ்ரீமந்த சங்கர்தேவா திதியை முன்னிட்டு கவுகாத்தி மண்டல வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 28 - முதல் ஓணத்தை முன்னிட்டு கொச்சி, திருவனந்தபுரம் வங்கிகள் செயல்படாது.
ஆகஸ்ட் 29 - திருவோணத்தை முன்னிட்டு கொச்சி, திருவனந்தபுரம் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 30 - ரக்ஷா பந்தனை முன்னிட்டு ஜெய்பூர், சிம்லா மண்டல வங்கிள் செயல்படாது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்