Beach to Chepauk: ஜனவரி மாதம் வரை பறக்கும் ரயில் சேவை ரத்து!

Jun 01, 2023,12:28 PM IST
சென்னை : சென்னையில் ஜூலை 01 ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரையிலான 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில்  4வது வழித்தட ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. அதேசமயம், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகப்படுத்தவும் திட்டமிட்டு 1985 ம் ஆண்டு முதல் ரயில்வே விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே சுமார் ரூ.500 கோடியில் 3வது கட்டமாக நடந்த வந்து பறக்கும் ரயில் சேவைக்கான பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. 

தற்போது இந்த பிரச்சவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் பறக்கும் ரயில் திட்ட பணிகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இந்த பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஏற்கனவே முடிந்து விட்டது. இந்நிலையில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது பாதை அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் சென்னை எழும்பூர் வரும் பயணிகள் பிற பகுதிகளுக்கு செல்வது சுலபமாகி விடும். இதனால் சென்னையில் இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்