மத்திய பட்ஜெட் 2023 : நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

Feb 01, 2023,09:05 AM IST
புதுடில்லி : லோக்சபாவில் இன்று (பிப்ரவரி 01) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரின் இன்று அலுவல் துவங்கியதும், நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை துவங்கினார்.



இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, பட்ஜெட் தாக்கலுக்கான ஜனாதிபதியின் அனுமதியை பெற்றார் நிர்மலா சீதாராமன். அதைத் தொடர்ந்து பார்லிமென்ட் கட்டிட நார்த் பிளாக்கில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் தனது அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு லோக்சபாவிற்கு பட்ஜெட் உரையுடன் புறப்பட்டார்.

மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், 2024 ம் ஆண்டு பிப்ரவரி 01 ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக மட்டுமே இருக்கும். 

இதனால் இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையிலான பல அறிவிப்புக்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டை நாடே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்