மத்திய பட்ஜெட் 2023 : ரூ. 20 லட்சம் கோடிக்கு விவசாயக் கடன்கள்.. முக்கிய அறிவிப்பு

Feb 01, 2023,11:22 AM IST
புதுடில்லி : 2023-2024 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் மற்றும் ஒவ்வொரு துறைக்குமான நிதி ஒதுக்கீட்டு விபரங்கள் இதோ : 

* 2023ம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7% ஆக இருக்கும். உலகளாவிய கோவிட் பாதிப்பையும் தாண்டி இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியில் உள்ளது 
* ரூ. 20 லட்சம் கோடிக்கு விவசாயக் கடன்கள் வழங்க மத்திய அரசு இலக்கு. நாடு முழுவதும் 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் 
* சிறார்கள், இளம் பிராயத்தினருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் ஏற்படுத்தப்படும். கிராமப்புறங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு 
* மீனவர் நலன் மற்றும் மீன்பிடி துறை வளர்ச்சிக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு
* வேளாண்துறை மூலம் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
* உணவு தானிய விநியோகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு
* 3 ஆண்டுகளில் 38,000 ஆசிரியர்கள் பணியமர்த்த திட்டம்.
* பிரதமர்  ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 79,000 கோடியாக அதிகரிப்பு.
* பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ. 15,000 கோடி நிதி ஒதுக்கீடு.
* 100 போக்குவரத்து அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 75,000 கோடி நிதி.
* ரயில்வே துறைக்கு ரூ. 2.4 லட்சம் கோடி நிதி. 
* கர்நாடக நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ. 5300 கோடி மத்திய  உதவி.
* மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன்கள் திட்டம் மேலும் ஓராண்டு தொடரும்
* மருத்துவ கல்லூரிகளுடன் சேர்த்து,157 புதிய நர்சிங் கல்லூரிகள் நிறுவப்படும்.
* கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
* இந்தியாவின் அனைத்து பெருநகரங்கள், நகரங்களிலும் கழிவுகளை அகற்றுவதில் முழுமையாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
* நகர்ப்புற அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சி நிதிக்கு ஆண்டுதோறும் ரூ. 10,000 கோடி நிதி
* KYC நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.
* அனைத்து வர்த்தக பயன்பாட்டுக்கும் பான் எண் பொதுவான அடையாள அட்டையாக்கப்படும்.
* சாலை போக்குவரத்துத் திட்டங்களை மேம்படுத்த ரூ. 75,000 கோடி நிதி
* நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும்
* 5ஜி பயன்பாட்டுக்கான ஆப்களை தயாரிக்க ஆய்வகங்கள் அமைக்கப்படும்
* டிஜிலாக்கர் சேவை அதிகரிக்கப்படும்
* இ நீதிமன்றங்களை அமைக்க ரூ. 7000 கோடி நிதி
* தோட்டக்கலைத்துறை  வளர்ச்சிக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு
* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த "பி.எம்.பிரனாம்" திட்டம் தொடங்கப்படும்
* மாசு ஏற்படுத்தும் பழைய அரசு வாகனங்கள், ஆம்புலன்கள் மாற்றப்படும்.
* சிஎன்ஜி உள்ளிட்ட மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு   ரூ. 35,000 கோடி நிதி ஒதுக்கீடு

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்