சென்னை: தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 11ம் தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாடு அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்துவது வழக்கமானது. அந்த வகையில் மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஜூலை 11ம் தேதி அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபிக்கள், ஏடிஜிபிக்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டம் ஒழுங்கு நிலவரம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துவார்.
சமீபத்தில் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆளுநர் ஆர். என். ரவி. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழவில்லை என்று கூறியிருந்தார். தொடர்ந்து பாஜக, அதிமுக தலைவர்களும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, கொலைகள் அதிகரித்து விட்டன என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கேற்ப பல சம்பவங்களும் நடந்துள்ளன.
தொடர்ந்து ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே உரசல் இருந்து கொண்டே வருகிறது. தற்போது ஆளுநர் டெல்லி போயுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியும் உள்ளார். இந்தப் பின்னணியில் முதல்வர் தலைமையில், சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆனால் இது வழக்கமான கூட்டம்தான் என்று அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தின்போது அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுரைகள் பல்வற்றை சொல்லும் வாய்ப்புள்ளது. சமீபத்தில் கோவையில் டிஐஜி விஜயக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே காவல்துறை அதிகாரிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில், ஊக்கம் தரும் வகையில் முதல்வர் பேசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}