தலைநகரில் "அண்ணா".. தமிழ் நகரில் "கலைஞர்".. பிரமாண்ட அறிவுத் திருக்கோவில்!

Jul 13, 2023,09:38 AM IST

சென்னை: சென்னையில் மறைந்த கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் அமைக்கப்பட்டது போல, மதுரையில் பிரமாண்டமாக மு.க.ஸ்டாலின் அரசால் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் வருகிற 15ம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இந்த பிரமாண்ட அறிவுத் திருக்கோவிலை திமுக அரசு நிர்மானித்துள்ளது. தென் தமிழ்நாட்டின் புதிய அடையாளமாக மாறப் போகும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம்,  தென் மாவட்ட மக்களின் அறிவுத் தாகத்திற்கு தீனி போடும் என்று உறுதியாக நம்பலாம்.



சுமார் 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த பிரமாண்ட நவீன நூலகம் கட்டப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே  மிகப் பெரிய நூலகம் என்ற பெயரையும் இது பெற்றுள்ளது. மொத்தம் அடித்தளத்தையும் சேர்த்து 8 தளங்களுடன் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 120.75 கோடி செலவில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது.

அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி, நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைந்துள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக் கூடம், ஓய்வரை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கைப் பிரிவு ஆகியவை அமைந்துள்ளன.

முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம் நாளிதழ்கள் பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு ஆகியவை இடம் பெற்றுள்ளன. 2வது தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.

3வது தளத்தில், ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. 4வது தளத்தில் எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30,000 நூல்களுடனான பகுதி அமைந்துள்ளது.

5வது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.  6வது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் உள்ளன.

இந்த நூலகத் திறப்பு விழா ஜூலை 15ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைத் திறந்து வைக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில���, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கலைஞரின் பெயரில் மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஜூலை 15 அன்று பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் திறந்து வைக்கிறேன்.

#கலைஞர்100-இல் இதுவரை அமைக்கப்பட்ட மருத்துவமனை, நூலகம், கோட்டம் ஆகியவையும் இன்னும் அமையவிருப்பவையும் காலம் கடந்து நிற்கும்! மக்களுக்கு என்றென்றும் பயன் தரும்! கலைஞரின் புகழை உரக்கச் சொல்லும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்