ஜூலை 13ல் "சந்திரயான் 3" பயணம் தொடங்கும்.. ஆகஸ்ட்டில் நிலாவில் தரையிறங்கும்!

Jun 30, 2023,09:35 AM IST
டெல்லி:  இந்தியாவின் நிலவுப் பயணத்தின் அடுத்த மைல் கல் ஜூலை 13ம் தேதி தொடங்கவுள்ளது. அன்றுதான் சந்திரயான் 3 விண்கலத்தின் நிலவுப் பயணம்தொடங்குகிறது. ஆகஸ்ட் மாதம் நிலாவில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முந்தை விண்கலங்கள் இறங்கத் திட்டமிட்டது போலவே நிலாவின் தென் முனைப் பகுதியில் அதே இடத்தில்தான் சந்திரயான் 3 விண்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள விக்ரம் லேன்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை தரையிறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.



இது வெற்றிகரமாக நடந்தால் நிலவின் தென்முனையில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் விண்கலமாக சந்திரயான் 3 வரலாறு படைக்கும்.

இஸ்ரோ உருவாக்கியுள்ள சந்திரயான் 3 விண்கலமானது ஜூலை 13ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா விண்கலம் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படும்.  கிட்டத்தட்ட ஒரு மாத காலம் பயணம் செய்து நிலவில் ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும்.

இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம்தான் நிலாவில் நீரும், ஹைட்ராக்ஸில் மூலக்கூறுகளும் இருப்பதைக் கண்டறிந்தன. இந்த விண்கலமானது நாசாவின் சாதனங்களையும் உடன் எடுத்துச் சென்றது என்பது நினைவிருக்கலாம்.

சந்திரயான் 2 திட்டமானது தோல்வியில் முடிந்தது. நிலாவுக்கு செலுத்தப்பட்ட விண்கலமானது, தரையிறங்கும் முயற்சியின்போது 2.1 கிலோமீட்டர் தொலைவிலிருந்து விழுந்து நொறுங்கிப் போனது. இருந்தாலும் சந்திரயான் 3 திட்டமானது நிச்சயம் மிகப் பெரிய வரலாறு படைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்