வாங்க பேசலாம்... போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு

May 30, 2023,11:29 AM IST
சென்னை : போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் காலவரையற்ற ஸ்டிரைக்கில் பஸ் ஊழியர்கள் இறங்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள் மற்றும் கன்டக்டர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நேற்று திடீரென அரசு பஸ் டிரைவர்கள், கன்டெக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திடீரென போக்குவரத்து பணிமனைக்கு பஸ்களை திருப்பி, மீண்டும் பஸ்களை இயக்க போவதில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென நிறுத்தப்பட்ட பஸ்களால் வாரத்தின் முதலான நேற்று வேலைக்கு சென்ற பொது மக்கள் வீடு திரும்ப முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். இதை காரணமாக வைத்து ஷேர் ஆட்டோக்கள், தனியார் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிக்க துவங்கின. 

போக்குவரத்துக் கழக வேலைகளுக்கு தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுப்பதை எதிர்த்தே இந்த ஸ்டிரைக் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாளை இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில் திமுகவின் தொமுச உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு பஸ் ஊழியர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்