மதுரை, தேனி வழியாக.. சென்னை டூ போடிநாயக்கனூர் புது ரயில்.. ஜூன் 16 முதல்!

Jun 03, 2023,04:45 PM IST
சென்னை: சென்னையிலிருந்து மதுரை, தேனி வழியாக போடிநாயக்கனூர் செல்லும் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 16ம் தேதி முதல் ஓடத் தொடங்கும்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் இந்த ரயிலைக் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



மதுரையிலிருந்து தற்போது சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இரவு 10.50 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.55க்கு சென்னை சென்டிரலை இது அடையும். இந்த ரயில் ஜூன் 15ம் தேதி முதல் போடி வரை நீட்டிக்கப்படுகிறது. 

நீட்டிக்கப்படும் சென்னை - போடிநாயக்கனூர் ரயிலானது தினசரி  இரவு 10.30 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு மதுரையை வந்தடையும். அங்கிருந்து 7.15 மணிக்குக் கிளம்பி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக காலை 9.35 மணிக்கு போடியை சென்றடையும். மறு மார்க்கத்தில் போடியிலிருந்து இரவு 8.30 மணிக்குக் கிளம்பி 10.45 மணிக்கு மதுரை வரும். அங்கிருந்து 10.50 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.55க்கு சென்னை சென்டிரல் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் வாரம்  3 நாட்களுக்கு இயக்கப்படும்.

இதேபோல மதுரை -தேனி இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலானது போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்படுகிறது. தினசரி காலை 8.20 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி வட பழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக காலை 10.30 மணிக்கு போடியை சென்றடையும். மறுமார்க்கத்தில்,  போடியிலிருந்து மாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு மதுரைக்கு இரவு 7.50 மணிக்கு வந்தடையும்.

இந்த இரு புதிய ரயில் சேவைகளும் ஜூன் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்