அவர் பேசிக் கொண்டே இருக்கட்டும்.. ஆளுநர் ஆர். என். ரவியை சீண்டிய மு.க.ஸ்டாலின்

Jun 07, 2023,09:23 AM IST
சென்னை: திராவிட மாடல் அரசின் சாதனைகளையும், வெற்றியையும் ஒருவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதனால்தான் தினசரி ஏதாவது பேசிக் கொண்டே இருக்கிறார். அவர் அப்படியே தொடர்ந்து  பேசிக் கொண்டிருக்கட்டும் என்று ஆளுநர் ஆர். என். ரவியை மறைமுகமாக சாடியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையிலான பூசல் தொடர்ந்து நீரு பூத்த நெருப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது ரவி சீண்டுவதும், ஸ்டாலின் பதில் அளிப்பதுமாக இது தொடர்ந்து கொண்டுள்ளது.



இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களை சாடிய ஆளுநர் ரவி, இதனால் மட்டும் முதலீடுகள் வந்து விடாது. தொழிலதிபர்களை ஏமாற்ற முடியாது என்று கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த பின்னணியில் சென்னையில் நேற்று 500 நகர்ப்புற சுகாதார மற்றும் நல மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் ஆளுநருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.

முதல்வர் பேசியபோது குறிப்பிட்டவற்றிலிருந்து சில துளிகள்: திராவிட மாடல் அரசுக்கு கல்வியும், சுகாதாரமும் இரு கண்களைப் போல. அதற்கேற்பவே திட்டங்களை நாங்கள் இயற்றி செயல்படுத்தி வருகிறோம்.

கல்வித்துறையிலும், வளர்ச்சியிலும்  தமிழ்நாடு தலை சிறந்து விளங்குகிறது. மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதில் சிறந்து விளங்குகிறது. இருப்பினும் ஒருவருக்கு மட்டும் அது கண்ணுக்குத் தெரிவதில்லை. புரிந்து கொள்ளவும் அவர் விரும்புவதில்லை.

திராவிட மாடல் அரசையும், அதன் வெற்றியையும் அவர் விரும்பவில்லை, ஏற்கவும் மனம் வரவில்லை. எனவேதான் மக்களைக் குழப்புவதற்காக அரசு குறித்து ஏதாவது விமர்சித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் மக்கள் தெளிவானவர்கள். அவர்களுக்கு எல்லாம் புரியும். அவர்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.  எனவே அவர் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே இருக்கட்டும்.. பேசிக் கொண்டே இருக்கட்டும்.  அவர் அப்படிப் பேசிக் கொண்டிருந்தால்தான் நாமும் எழுச்சியுடன் இருக்க முடியும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நல வாழ்வு மையங்கள், ஏற்கனவே உள்ள நகர்ப்புற தொடக்க நல்வாழ்வு மையங்களுடன் இணைந்து செயல்படும். மாநகராட்சிகள், நகராட்சிகளில் உள்ள ஏழை மக்களுக்காக இவை செயல்படும். சென்னை தவிர மதுரை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய பிராந்தியங்களிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மையமும் ரூ. 25 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் ஒரு டாக்டர், நர்ஸ், ஹெல்த் இன்ஸ்பெக்டர், துப்புறவுப் பணியாளர் ஆகியோர் இருப்பார்கள். இவர்களது பணி நேரமானது காலை 8 மணி முதல் பிற்கபகல் 12 மணி வரையிலும், பின்னர்  மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலுமாகும்.

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்