ஒடிஷா ரயில் விபத்து..  பட்நாயக்குடன் ஸ்டாலின் பேச்சு.. கருணாநிதி பிறந்த நாள் கூட்டம் ரத்து

Jun 03, 2023,09:56 AM IST
சென்னை: ஒடிஷா ரயில் விபத்தைத் தொடர்ந்து அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன் மூலம் பேசியுள்ளார். மேலும் இன்று திட்டமிடப்பட்டிருந்த மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன்,  பெங்களூரு - ஹவுரா ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதிக் கொண்டதால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது.



இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், துணை ராணுவப் படையினர், தீயணைப்புப் படையினர் என பலரும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் சென்னை, பெங்களூர் ரயில்கள் சிக்கியிருப்பதால் தமிழ்நாடு, கர்நாடகத்தில் சோகம் நிலவுகிறது.  விபத்து நடந்ததும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கைத் தொடர்பு கொண்டு பேசினார். விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த அவர் மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று அறிவித்தார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒடிஷா விரைகிறார்.

இந்த நிலையில் இன்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாலையில் பொதுக்கூட்டத்திற்கும், பகலில் செம்மொழிப் பூங்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. மாறாக கருணாநிதி நினைவிடத்திலும், ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்