விராத் கோலிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த ரசிகை.. ரசிகர்கள் கொந்தளிப்பு!

Feb 23, 2023,09:34 AM IST
புதுடில்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கு அவரின் தீவிர ரசிகை ஒருவர் லிப் லாக் முத்தம் கொடுத்த விவகாரம் தான் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலியும் ஒருவர். இவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளம். விராத்தை திருமணம் செய்ய பல பெண்கள் போட்டி போட்டனர். ஆனால் அவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தார்.



பல கிசுகிசுக்களில் சிக்கிய பிறகு ஒரு வழியாக 2017 ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு வமிகா என்ற மகள் உள்ளார். இந்த சமயத்தில் டில்லியில் நடக்கும் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியத்தும், அதிக ரன்களை எடுத்தும் அசத்தி வருகிறார் விராத் கோலி.

இந்நிலையில் நொய்டாவில் பிரபலங்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ள  Madame Tussauds மியூசியத்தில் விராத் கோலியின் மெழுகு சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு, விராத்தின் தீவிர ரசிகை ஒருவர் லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார். என்னமோ நிஜமான விராத்  கோலிக்குக் கொடுப்பதைப் போல அனுபவித்து ரசித்துக் கொடுத்துள்ளார் இந்த ரசிகை. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி, செம வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவை பார்த்த பலரும், இதெல்லாம் ரொம்ப தப்பு... இதற்காக அனுஷ்கா சர்மா அந்தப் பெண் மீது வழக்கு கூட போடலாம். அனுஷ்கா என்ன இதெல்லாம் என கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோவை விட, இதற்கு அனுஷ்கா சர்மாவின் ரியாக்ஷன் என்ன என்பதை தெரிந்து கொள்ள தான் அதிகமானவர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால் தாங்கள் காதலிக்கும் காலத்தில் இது போன்ற பல நெருக்கமான போட்டோக்களை அனுஷ்கா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதே சமயம் விராத்தின் மிக கடுமையான காலங்களிலும் ஒரு காதலியாகவும், மனைவியாகவும் மிகப் பெரிய பலமாக இருந்தவர் அனுஷ்கா. எனவே இந்த முத்த மேட்டரை அவர் பக்குவமாகவும், முதிர்ச்சியாகவும் எடுத்துக் கொள்வார் என்று நம்பலாம். ரசிகைகளும் அதேபோல பொது வெளியில் சற்று நாகரீகமாக நடந்து கொள்ள முயற்சித்தால் கண்ணியமாக இருக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்