டில்லிக்கு கடிதம் எழுதுவீங்களா?...கவர்னரை கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டிய திமுக.,வினர்

Jun 30, 2023,11:07 AM IST
சென்னை : அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை காரணம் காட்டி தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி தமிழக கவர்னர் ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தருந்தார். இதற்கு திமுக.,வினர் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சரை நீக்குவதற்கு கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. இதை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜியை நீக்கியதாக கவர்னரின் உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே சென்னையில் அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கவர்னரை கேள்வி கேட்டு திமுக., சார்பில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.



அதில், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 41 பேரின் போட்டோக்கள், அவர்கள் வகிக்கும் பதவி, அவர்கள் மீதுள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு, குற்றப் பின்னணியுடன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கும் படி டில்லிக்கு கடிதம் எழுதுவீர்களா? என கேட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திமுக.,வை சேர்ந்த வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது பாஜக மற்றும் திமுக இடையேயான மோதலை அதிகப்படுத்தி, தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பு உள்ளது.

கவர்னருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில் இன்று காலை, செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை திரும்பப் பெறுவதாக கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெறும் அளவிற்கு இரவோடு இரவாக அப்படி என்ன நடந்தது என்ன கேள்வியும் அரசியல் வட்டாரத்திலும், பொது மக்களிடமும் நிலவி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்