சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த திருமகன் ஈவேரா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததால், அந்த தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அவரின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மார்ச் 10 ம் தேதி எம்எல்ஏ.,வாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 74 வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், மார்ச் 15 ம் தேதி மாலை ஈவிகேஎஸ் இளங்கோவன், லேசான நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரது உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
{{comments.comment}}