களைகட்டிய ரம்ஜான் 2023 : இந்தியாவில் சிறப்பு தொழுகையுடன் கொண்டாட்டம்

Apr 22, 2023,09:29 AM IST
டில்லி : இந்தியாவில் ஏப்ரல் 22 ம் தேதியான இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தி, ரம்ஜானை கொண்டாடி வருகின்றனர். 

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மார்ச் 24 ம் தேதி துவங்கியது. ரமலான் முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் பகல் பொழுதில் தண்ணீர், உணவு ஆகியவற்றை தவிர்த்து கடுமையான நோன்பு கடைபிடித்து வந்தனர். ரமலான் மாதம் நிறைவடைந்து, இஸ்லாமிய நாட்காட்டியில் பத்தாவது மாதமான ஷவ்வால் மாதம் துவங்கும் நாளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.



ஏப்ரல் 20 ம் தேதி பிறை தெரியாத நிலையில் சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளிலும், இந்தியாவின் கேரள மாநிலம், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் 21 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பிற பகுதிகள், ஆசிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் ஏப்ரல் 22 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சிறப்பு தொழுகைகளுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

மும்பை சந்தையில் ரம்ஜானை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது. ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் குவிந்ததால் விற்பனை ஜோராக நடந்தது. இன்று அதிகாலை முதல் மசூதிகளிலும், மைதானங்களிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இந்த சிறப்பு தொகையில் கலந்து கொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.

புத்தாண்டை உடுத்தி, சிறப்பு தொழுகை நடத்திய பிறகு இனிப்புக்களையும், ஈகை பெருநாள் வாழ்த்துக்களையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி வருகின்றனர். மற்ற இன மக்களும் தங்களின் இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்