இப்படியே விடாதீங்க.. திமிறி எழுங்க.. "தேங்க் யூ சார்".. கமல், ஷங்கர் ஒரே உருகல்!

Jun 29, 2023,09:24 AM IST
சென்னை: இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் விட்ட கமல்ஹாசன், கையோடு இயக்குநர் ஷங்கருக்கு ஒரு கைக்கடிகாரத்தை வாங்கி  கையில் மாட்டி அழகு பார்த்துப் பூரித்துப் போய் விட்டார்.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் மிகப் பெரிய வெற்றிப் படமாக, நாடு முழுவதும் பேசப்பட்ட படமாக பல பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியானது. இந்தியன் தாத்தா கெட்டப் மிகப் பெரிய அளவில் பாப்புலரும் ஆனது.



இந்தப் படத்தின் 2ம் பாகத்தை தற்போது எடுத்து வருகிறார் ஷங்கர். கமல்ஹாசன் நடிக்க பல்வேறு புதிய நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடங்கல்களைச் சந்தித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது ஷங்கருக்கு கமல்ஹாசன், கைக்கடிகாரம் பரிசளித்துக் கெளரவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில்,  இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர்.  

இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி. 
அன்பன், கமல்ஹாசன் என்று கூறியிருந்தார்.

இதற்கு ஷங்கர் நன்றி தெரிவித்து பதில் டிவீட் போட்டிருந்தார். அதில், நன்றியும், மகிழ்ச்சியிலும் எனது இதயம் நிரம்பியுள்ளது சார். எனது சிறந்ததை கொடுப்பதிலிருந்து நான் நிற்க மாட்டேன். உங்களது நடிப்பும், தோற்றமும் படத்திற்குத் தேவையான சக்தியைக் கொடுத்து விட்டது என்பதை தனியாகச் சொல்லத் தேவையில்லை. உங்களது இந்த அருமையான பாராட்டுக்கு இந்த சிறப்பான நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன் சார்.  இந்த உணர்வை எப்போதும் மனதில் இருத்தி வைத்திருப்பேன் என்று கூறியுள்ளார் ஷங்கர்.

அப்படி என்ன சீன்தான் கமல் பார்த்தாரோ.. அதை எப்படித்தான் அப்படி சிறப்பாக ஷங்கர் எடுத்திருக்கிறாரோ.. பார்த்தே ஆக வேண்டும் போல் பரபரங்குதே..!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்