"ஸாரி.. காசெல்லாம் தர முடியாது".. உக்ரைன் அதிபரை கலாய்த்த  "டூப்ளிகேட்" மஸ்க்!

Jun 30, 2023,12:58 PM IST
வாஷிங்டன்: டிவிட்டர் அதிபர் எலான் மஸ்க்கை உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி பாலோ செய்துள்ளார். இதை எலான் மஸ்க்கின் டூப்ளிகேட் அக்கவுன்ட் கலாய்த்துள்ளது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் யுத்தம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து தீரமாக போராடி வருகிறது உக்ரைன். உக்ரைன் நாட்டு அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி பல்வேறு நாடுகளிடமும் பண உதவி, ஆயுத உதவி என கோரி வருகிறார். 



சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து பண உதவியையும் அவர் பெற்றார். ஆயுத உதவிகளையும் அவர் பெற்று வருகிறார். இந்த நிலையில் டிவிட்டரில் அதன் அதிபர் எலான் மஸ்க்கை பின்பற்றத் தொடங்கியுள்ளார் ஜெலன்ஸ்கி. இதை வைத்து டூப்ளிகேட் எலான் மஸ்க்.. அதாவது எலான் மஸ்க்கின் பரோடி கணக்கை வைத்திருக்கும் நபர் உக்ரைன் அதிபரை கலாய்த்துள்ளார்.

"நோ.. ஜோ பைடன் கொடுத்தது போல 6.2 பில்லியன் டாலர் பணம் எல்லாம் நான் தர மாட்டேன்" என்று அவர் கிண்டலடித்துள்ளார். 

இந்த டூப்ளிகேட் எலான் மஸ்க்கின் குசும்புத்தனத்திற்கு பலரும் சரமாரியாக பதில் போட்டு வருகின்றனர்.  அதற்கு அந்த டூப்ளிகேட்டும் பதில் அளித்து வருகிறார்.

டூப்ளிகேட் மட்டுமல்ல.. நிஜ எலான் மஸ்க்கும் கூட இப்படி கலாய்க்கக் கூடிய ஆளுதான்.. என்ன அதற்குள் டூப்ளிகேட் முந்தி விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

news

கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்