ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனுத்தாக்கல்

Feb 02, 2023,03:09 PM IST
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதன் இன்று, தனது கட்சியினருடன் ஊர்வலமாக சென்ற வேட்புமனு தாக்கல் செய்தார்.



ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 07 ம் தேதி கடைசி நாளாகும். 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வோட்டியிடும் மேனகா நவநீதன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மறைந்ை ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகனின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதே சமயம், இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சார்பில் டி.செந்தில் முருகன் போட்டியிடுவார் என வேட்பாளரை அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

கம்பனும் கவியும்

news

என் இராமனே!

அதிகம் பார்க்கும் செய்திகள்