ஈரோடு இடைத்தேர்தல்...ஈபிஎஸ் பேசும் போதும் தூக்கத்தில் சொக்கிய வேட்பாளர்...வச்சு செய்யும் நெட்டிசன

Feb 18, 2023,02:54 PM IST
ஈரோடு : ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, அதிமுக வேட்பாளர் தூங்கி வழிந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் ஈபிஎஸ் அணியை சேர்ந்த தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரமும் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது. தேர்தல் களத்தில் நடக்கும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும், தலைவர்களின் பேச்சுக்களும் டிரெண்டாகி வருகின்றன. இதற்கிடையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் திறந்த வாகனத்தில் இருந்தபடியே பேசி வாக்களார்களிடம் ஓட்டு சேகரித்தார். 

திமுக அரசின் செயல்பாடுகள், நிறைவேற்ற தவறிய வாக்குறுதிகளை விமர்சித்து காரசாரமாக எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்த போது, அவரது அருகில் கை கூப்பியபடி நின்ற அதிமுக வேட்பாளர் தென்னரசு தூங்கி வழிந்து கொண்டிருந்தார். தூக்கம் கண்களை சொருகி, லைட்டாக அவர் ஸ்லிப்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.

"பிரச்சாரத்தில் தூங்கினால் பரவாயில்லை. சட்டசபையில் போய் தூங்காமல் இருந்தால் சரி". "சட்டசபையிலேயே பலர் இதை தானே செய்து கொண்டிருக்கிறார்கள்". "இரவு முழுவதும் வேலை போல அதுதான் அசந்து விட்டார்." "அவரது வயதிற்கு தூக்கம் வருவது ஒரு விஷயமே இல்லை. இதெல்லாம் பெரிய விஷயமா பேசிக்கிட்டு" என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நல்ல வேளை இந்த வேட்பாளர் அதிமுகவாக இருந்து விட்டார். தேமுதிகவாக இருந்திருந்தால், விஜயகாந்த்தும் ஆக்டிவான நிலையில் இருந்திருந்தால், அவரது  பிரசாரத்தின்போது இதுபோல தூங்கி விழுந்திருந்தால்.. விஜயகாந்த் எப்படி ரியாக்ட் செய்திருப்பதை நினைத்தாலே கண்ணு வியர்க்குது!

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்