ஐரோப்பாவின் 4வது பொருளாதார வல்லரசான ஜெர்மனியில் .. பொருளாதார மந்த நிலை!

May 25, 2023,03:07 PM IST
பான்: ஐரோப்பவின் நான்காவது பொருளாதார வல்லரசான ஜெர்மனி பொருளாதார மந்தநிலைக்குப் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனியில் ஈரோவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.  அதேசமயம், டாலர் மதிப்பு 2 மாதங்களில் இல்லாத அளவிலான உச்சத்தை எட்டியுள்ளது.  ஜெர்மனி பொருளாதார மந்த நிலைக்குள் நுழைந்திருப்பதாக அந்த நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.



கடந்த பல மாதங்களாகவே டாலரின் மதிப்பை விட ஈரோவின் மதிப்பு குறைந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் கடந்த  சில வாரங்களாக இது மோசமாகி வந்தது.  தற்போது மிகப் பெரிய வீழ்ச்சியை ஈரோ சந்தித்துள்ளது. முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வெகவாக குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து கடந்த நான்கு காலாண்டாக ஜெர்மனியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வந்ததால் அது மந்த நிலையை எட்டியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜெர்மனியின் ஜிடிபியும் கடந்த 2 காலாண்டாக சரிவைச் சந்தித்துள்ளது.  ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஜெர்மனி ஜிடிபியானது 0.3 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.  தொடர்ந்து 2வது காலாண்டாக ஜிடிபி சரிவைச் சந்தித்ததால் ஜெர்மனிக்கு சிக்கலாகியுள்ளது.

ஜெர்மனி அரசுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த மாதம்தான் பொருளாதார வளர்ச்சி தற்போது உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று ஜெர்மனி அரசு கூறியிருந்தது.  ஆனால் ஜிடிபியில் தொடர் சரிவு ஏற்பட்டிருப்பதும், பொருளாதார மந்த நிலையை ஜெர்மனி எட்டியிருப்பதும் அந்த நாட்டு அரச அதிர வைத்துள்ளது.

ஜெர்மனியில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் மக்கள் பணத்தை செலவழிக்க முடியவில்லை. பொருட்கள் வாங்குவது குறைந்தது. பொருட்களின் விலையும் அதிகரித்து வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விற்றதை விட விலைவாசி 7.2 சதவீதம் அதிகரித்தது.

சமீபத்திய செய்திகள்

news

கருப்புக் கொடி காட்டிய.. பாஜக இளைஞர் அணியினரை அருகே அழைத்து.. மிட்டாய் கொடுத்த ராகுல் காந்தி

news

காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை: மரங்கள் மாநாட்டில் தவெகவை தாக்கி பேசிய சீமான்

news

சஞ்சு சாம்சன் போவாருன்னு பார்த்தா.. ராகுல் டிராவிட் ராஜிநாமா.. என்ன நடக்குது?

news

அண்ணாமலை மற்றும் தவெக குறித்து விமர்சிக்க வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!

news

என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!

news

இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

news

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!

அதிகம் பார்க்கும் செய்திகள்