மினியேச்சர் சேப்பாக்கம் ஸ்டேடியம்.. அசந்து போன தோனி.. ரசிகரின் அன்பு!

May 21, 2023,12:21 PM IST
சென்னை:  எம்.எஸ். தோனிக்கு மினியேச்சர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பரிசாக  கொடுத்து அசத்தியுள்ளார் ரசிகர் ஒருவர்.

முன்னாள் இந்திய கேப்டனும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வலம் வருபவருமான எம்.எஸ். தோனிக்கு எங்கு பார்த்தாலும் ரசிகர்கள்தான். அவர் போகும் இடமெல்லாம் ரசிகர் படையும் கூடவே பின் தொடர்கிறது.  அப்படிப்பட்ட கிரிக்கெட் லெஜன்ட்டுக்கு சூப்பரான கிப்ட் கொடுத்துள்ளார் இந்த ரசிகர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டாக சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் விளங்குகிறது. மேலும் தோனிக்கும், சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கும் நிறைய நெருக்கமும் உள்ளது. இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் இந்த ஸ்டேடியத்தையே மினியேச்சர் வடிவில் கொண்டு வந்து பரிசாக கொடுத்து விட்டார் அந்த ரசிகர். அவரது பெயர் சிவா.




மினியேச்சர் வேர்ல்ட் மாடல்மேக்கர்ஸ் மூலமாக இந்த  மாதிரி சேப்பாக்கம் ஸ்டேடியம் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் தோனியிடம் அளிக்கப்பட்டது. அந்த மாடலைப் பார்த்து அசந்து போய் விட்டாராம் தோனி. நிஜ ஸ்டேடியம் போலவே இருப்பதாக ஆச்சரியப்பட்ட அவரிடம் அந்த மாடல் குறித்து விளக்கப்பட்டது. மேலும் அந்த மினியேச்சர் ஸ்டேடியத்தில் விளக்குகளும் பொருத்தப்பட்டு நிஜ  ஸ்டேடியம் விளக்கொளியில் மின்னினால் எப்படி இருக்குமோ அதேபோன்று காணப்பட்டது. 

இந்த மாடலை வெகுவாக பாராட்டியுள்ளார் தோனி. இந்தப் பரிசுக்காகவும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். கூடவே ஆட்டோகிராபும் போட்டுக் கொடுத்துள்ளார். இந்த மினியேச்சர் சேப்பாக்கம் ஸ்டேடியம் தற்போது வைரலாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்