10 வருடமாக.. பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த 51 பேர் .. படம் எடுத்த கணவன்!

Jun 22, 2023,03:28 PM IST

பாரீஸ்: பிரான்சில் தனது மனைவியை கடந்த 10 வருடமாக பலரும் பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ படம் எடுத்து ரசித்துள்ளார் ஒரு குரூரமான புருஷன். இந்த விவகாரம் பிரான்ஸை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.


மொத்தம் 51 பேர் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் எத்தனை முறை பலாத்காரம் செய்தார்கள் என்பதற்கு கணக்கே கிடையாது. கிட்டத்தட்ட தினசரி இந்த அக்கிரமம் நடந்துள்ளது. மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை மயக்க நிலையில் வைத்து இந்த பலாத்காரக் கொடுமையை இந்த கொடூரன் அரங்கேற்றியுள்ளார். இதை முழுக்க முழுக்க அவர் வீடியோ படமும் எடுத்துள்ளார்.


என்ன கொடூரம் என்றால் இத்தனைக் கொடுமையும் அந்தப் பெண்ணுக்கு சமீபம் வரைக்கும் தெரியவே இல்லையாம். கணவர்தான் தன்னுடன் உறவு கொண்டுள்ளதாகவே இந்தப் பெண் நினைத்து வந்துள்ளார். கடந்த 10 வருடமாக தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துத் தெரிய வந்ததும் அந்தப் பெண் அதிர்ந்து போய்விட்டாராம். இந்த ஜோடிக்கு திருமணமாகி 50 வருடங்களாகிறது என்பது வேதனையான இன்னொரு விஷயம்.


மொத்தம் 92 பேர் இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இதுவரை 51 பலாத்காரக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமே கைதாகியுள்ளனர். இவர்கள் 26 முதல் 73 வயது வரை கொண்டவர்கள் ஆவர். 


நகராட்சி கவுன்சிலர், லாரி  டிரைவர், தீயணைக்கும் வீரர், ஐடி ஊழியர், வங்கி ஊழியர், சிறைக் காவலர், நர்ஸ், பத்திரிகையாளர் என சகலரும் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளனர்.  இந்தப் பெண்ணின் கணவர் பெயர் டொமினிக்.  தினசரி தனது மனைவிக்கு இரவில் ரோலோஸெபம் என்ற மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து வந்துள்ளார் டொமினிக். அதைச் சாப்பிட்டு அவர் மயங்கிய பிறகு தனது வீட்டுக்கு ஆண்களை வரவழைப்பாராம் இந்த கணவன். அவர்கள் வந்து அப்பெண்ணை நாசம் செய்து விட்டுப் போவார்கள்.


இந்த பாலியல் வக்கிரத்தை வீடியோ எடுத்து அதை தொகுத்து வைத்து வந்���ுள்ளார் அப்பெண்ணின் கணவர். இந்த வீடியோக்களை தொகுத்து "ABUSES" என்ற பெயரில் ஒரு பென் டிரைவில் சேகரித்து வைத்துள்ளார். அதைப் போலீஸார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.  இதில் பல ஆண்கள் பலமுறை வந்து பாலியல் பலாத்��ாரம் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 


டொமினிக் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.  அவர்கள் டொமினிக்கின் செயலையும், தங்களது தாய்க்கு நேர்ந்த கொடுமையையும் அறிந்து அதிர்ந்து போய் விட்டனர். கணவரின் செயலால் பெரும் மன உளைச்சலுக்குள்ளான டொமினிக்கின் மனைவி தற்போது விவாகரத்து செய்து விட்டார். டொமினிக் மீதான விசாரணை தொடர்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்