சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி அந்த உத்தரவை சில மணி நேரங்களிலேயே நிறுத்தி வைத்து விட்டார்.
நாடு முழுவதிலுமிருந்து இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், இது சட்ட ரீதியாக செல்லாது என்ற சட்டக் கருத்துக்கள் எழுந்ததாலும், நாளை திமுக அரசு கோர்ட்டுக்குப் போய் அங்கு ஆளுநரின் நடவடிக்கை கண்டனத்துக்குள்ளானால் அது மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் மிகப் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதாலும் ஆளுநர் தனது நடவடிக்கையை நிறுத்தி வைத்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனது உத்தரவை நிறுத்தி வைத்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து கடிதம் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்ட செய்தி வெளியானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநருக்கு அமைச்சரவையில் ஒருவரை சேர்க்கவோ அல்லது நீக்கவோ சுயமாக அதிகாரம் இல்லாதபோது எப்படி ரவி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தார் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். இது கோர்ட்டுக்குப் போனால் ஆளுநர் கண்டனத்துக்குள்ளாவார் என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன. இதுபோன்ற ஒரு நடவடிக்கை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை எடுக்கப்பட்டதில்லை. திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மிகக் கடுமையாக இதைக் கண்டித்தன.
தேசிய அளவிலும் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ராஷ்டிரிய ஜனதாதளம் என பல்வேறு கட்சிகளும் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தன. இதனால் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் மிகப் பெரிய கெட்ட பெயர் நேற்று நாடு முழுவதும் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில்தான் தனது நிலையிலிருந்து ஆளுநர் பல்டி அடித்துள்ளார். ராத்திரியோடு ராத்திரியாக தனது நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக அவர் தெரிவித்து முதல்வருக்கும் இதை அறிவித்தார்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் மிகவும் அவசரப்பட்டு விட்டார் ஆளுநர் ரவி என்ற எண்ணம் மக்கள் மத்தியிலும் எழுந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்... மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
சுக்கிர பிரதோஷம்.. தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது!
ப்ளஸ் 1 பொதுத் தேர்வு... கணினி அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் அறிவிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}