டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல்கள் மோதல்...துப்பாக்கிச் சூடு

Jul 05, 2023,03:50 PM IST
டில்லி : டில்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக சொல்லப்படுகிறது.

கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தின் போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக முதல்கட்ட விசாரைணயில் தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.



ஆனால் எதற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது, யார் துப்பாக்கியால் சுட்டது என போலீசார் விசாரித்து வருகின்றனர். இருந்தாலும் வழக்கறிஞர்கள், க்ரிமினல்களைப் போல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் பார்க்கும் செய்திகள்