தமிழில் இந்தியை திணிக்கவே முடியாது...ஆளுநர் ரவியின் ஓப்பன் டாக்

Apr 13, 2023,11:25 AM IST
சென்னை : தமிழ் மொழியில் இந்தி மொழியை திணிக்க முடியாது. தமிழ் மிக பழமையான மொழி என தமிழக ஆளுநர் ரவி, பனாரஸ் பல்கலைக்கழக  மாணவர்களிடம் பேசினார்.

விழாவில் அவர் பேசுகையில், தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது. இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமையானது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் தமிழ் மீது திணிக்க முடியாது. தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழை கற்றுக் கொண்டு, தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மாணவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.



இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டிற்கு 3500 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கு முந்தைய வரலாறும் உள்ளது. தமிழ் மொழி இல்லாமல் பிற மொழி பேசுபவர்களும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நிவைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழை ஆழமாக படித்து, தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும்.

பனாரஸ் இந்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து ராஜ் பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும். 2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும், உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் விளங்கும். அதில் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்