சென்னை : கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் தாமதம், போராட்டத்திற்கு பிறகு தற்போது டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை டைரக்டர் ஷங்கரே அடிக்கடி வெளியிட்டு, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறார்.

இந்தியன் 2 படத்திற்காக நடிகர் விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகவும், அவருக்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க உள்ளதாகவும் விவேக் மரணமடைந்த சமயங்களில் செய்திகள் உலா வந்தன. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, விவேக் நடித்த கடைசி படம் என்பதால் அவரது காட்சிகளை அப்படியே பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது ஆக்ஷன் காட்சிகள் மும்முரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த படத்தில் கமலுக்கு மொத்தம் 7 வில்லன்களாம். இவர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். பனையூர் பகுதியில் ஒரு வாரம் இரவு நேர ஷூட்டிங் நடத்த இந்தியன் 2 டீம் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியர்கள் - ஆங்கிலேயர்கள் இடையேயான மோதல், பிரம்மாண்ட சண்டை காட்சியாக படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே படத்தில் பாதிக்கும் மேற்பட்ட வேலைகள் முடிவடைந்து விட்டதால், அடுத்த கட்டமாக ஆடியோ, டீசர், ஃபர்ஸ்ட் லுக் போன்ற அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவர அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}