லண்டனில் படித்து வந்த இந்திய மாணவி தேஜஸ்வினி ரெட்டி.. குத்திக் கொலை.. 3 பேர் கைது

Jun 15, 2023,12:12 PM IST
லண்டன்: லண்டனில் படித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மாணவி தேஜஸ்வினி ரெட்டி என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில்  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி ரெட்டி. 27 வயதான இவர் உயர் படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். லண்டன் வெம்ப்ளி பகுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்த நிலையில் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.



அவருடன் தங்கியிருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த 24 வயது நபர்தான் இந்தக் கொலையைச் செய்தது தெரிய வந்துள்ளது. அவருடன் மேலும் ஒருவருக்கும் இதில் தொடர்புள்ளது. இந்த கொலை வழக்கில் இதுவரை  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் தேஜஸ்வினியின் இன்னொரு ரூம் மேட் பெண்ணும் காயமடைந்துள்ளார்.

சமீபத்தில்தான் தனது மேல் படிப்பை முடித்திருந்தார் தேஜஸ்வினி. விரைவில் தாயகம் திரும்பத் திட்டமிட்டிருந்தார். ஊருக்கு வந்ததும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூட தனது பெற்றோரிடம் கூறியிருந்தார் தேஜஸ்வினி. அதற்குள் இந்தப் படுகொலை நடந்துள்ளது. எதற்காக இந்தக் கொலை நடந்தது என்று தெரியவில்லை.

தேஜஸ்வினியின் உடலை தெலங்கானாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், தெலங்கானா அரசுக்கும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்