சர்வதேச வர்த்தகம் : மீண்டும் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த இந்திய பங்குச் சந்தைகள்

May 30, 2023,02:36 PM IST

டில்லி : ஜனவரி மாதத்தில் பிரான்ஸ் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலி காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும், உலக அளவில் மிகப் பெரிய பங்குச்சந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் டாப் 5 இடத்தில் இருந்து சரிந்தது. கடந்த ஐந்து மாதங்களாக தனது பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் இந்திய பங்குச் சந்தைகள் திணறி வந்தன.

ஆனால் அதானி குழும பங்குகளின் மதிப்பு மீண்டும் உயர துவங்கியதன் எதிரொலியாக மீண்டும் உலகின் மிகப் பெரிய பங்குச்சந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது இந்தியா. மே 26 ம் தேதி பங்குச்சந்தைகள் நிறைவடைந்த போது தேசிய பங்குச்சந்தை 3.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு உயர்ந்திருந்தது.



அதே சமயம் பிரான்ஸ் பங்குச்சந்தைகள் 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான இழப்பை சந்தித்தன. சீன மற்றும் அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக பிரான்ஸ் பங்குச்சந்தைகளில் முக்கிய பங்குகளின் மதிப்பு குறைய துவங்கியது. இதுவே பிரான்ஸ் பங்குச்சந்தைகளின் சரிவிற்கு காரணமாக அமைந்துள்ளது.

அதே சமயம் ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு நிதிகளின் புழக்கம் அதிகமாக உள்ளதால் சீன பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீள துவங்கி உள்ளன. இது இந்தியாவிற்கு சாதகமாக அமைந்தள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 5.7 பில்லியன் டாலர் அளவிற்கு இந்திய பங்குச்சந்தைகளில் ஏப்ரல் மாதம் முதல் முதலீடு செய்து வருகின்றனர். 

இதனால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி நிலையாக ஏற்றம் காண துவங்கின. தொடர்ந்து ஜிடிபி உயர்ந்ததால் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை உயர துவங்கி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

National Film awards 2024: 72வது தேசிய திரைப்பட விருதுகள்.. அமரனுக்கு 3.. மம்முட்டி சிறந்த நடிகர்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

தமிழ்நாடு நாள்.. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் களை கட்டிய மாணவர்களுக்கான போட்டிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்