ஹிட்லரைப் புகழ்ந்து போஸ்ட் போட்ட இந்தியர்.. கடும் எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்டார்!

May 25, 2023,11:56 AM IST
வாஷிங்டன்: ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரைப் புகழ்ந்து லிங்க்இன் சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்ட இந்தியருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பவே அவர் பகிரங்க மன்னிப்பு கோரி தனது பதிவை நீக்கி விட்டார்.

அந்த நபரின் பெயர் நீரப் மல்ஹோத்ரா. டிலாய்ட் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். இவர் ஹிட்லர் குறித்து ஒரு லிங்க்ட்இன் பதிவைப் போட்டிருந்தார். அதில் ஹிட்லர் மிகவும் வசீகரமானவர், அறிவாளி, காந்தத்தின் ஈர்ப்பு கொண்ட பேச்சாளர் என்றெல்லாம் வர்ணித்திருந்தார். 



மேலும், பல லட்சம்  பெண்கள், குழந்தைகள், ஆண்களை ஹிட்லர் கொன்றிருந்தாலும் கூட அவரது அந்த வசீகரத்துக்காக அவரை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்றெல்லாம் அந்த நபர் எழுதியிருந்தார்.  Friday Inspiration என்ற தலைப்பில் இந்த பதிவைப் போட்டிருந்தார் நீரப் மல்ஹோத்ரா.

இந்தப் பதிவுக்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. பலரும் வந்து கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர். நீரப் மல்ஹோத்ராவை லிங்க்ட்இன் தளம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.  

இதையடுத்து டிலாய்ட் நிறுவனம் ஒரு விளக்கம் அளித்தது. சம்பந்தப்பட்ட நபர் தங்களது நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்று அது கூறியிருந்தது. கடந்த மாதம்தான் நீரப் டிலாய்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். ஆனால் தற்போது அதிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். 

கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து தற்போது தனது பதிவை நீரப் நீக்கி விட்டார். அத்தோடு பகிரங்க மன்னிப்பும் அவர் கேட்டுள்ளார்.  யாருடைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும். இனிமேல் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார் நீரப் மல்ஹோத்ரா.

"தவறு செய்து விட்டால் தயங்காமல் அதை ஒப்புக் கொண்டு மன்னிப்புகேட்க வேண்டும் என்று எனது கு���ுநாதர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்துள்ளனர். எனவே எனது தவறை நான் ஒப்புக் கொள்கிறேன். அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார் நீரப் மல்ஹோத்ரா.

சமீபத்திய செய்திகள்

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்