சர்வதேச யோகா தினம் 2023 : மனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் யோகா

Jun 21, 2023,09:19 AM IST
டில்லி : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ம் தேதி கொண்டாடப்படுகிறது. யோகா மற்றும் தியானத்தின் முக்கியத்துவம் பற்றி உலகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு 9வது ஆண்டாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. வசுதைவ குடும்பகம் என்பது தான் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் தீமாக உள்ளது. 



2014 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 69 வது பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி, யோகா தினம் குறித்து முன்னெடுத்தார். யோகாவின் சிறப்புக்கள், பயன்கள் குறித்து அவர் பேசியதை கேட்ட பிறகு ஐநா சபையின் உறுப்பினராக உள்ள 193 நாடுகளும் சர்வதேச யோகா தினம் கொண்டாட ஒப்புதல் தெரிவித்தன. 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ம் தேதி, சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என ஐநா அறிவித்தது.

2015 ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது 190 நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு ஆண்டின் மிக நீண்ட நாளாக கருதப்படுவது ஜூன் 21 ம் தேதியாகும். அதனாலேயே இந்த நாளை தேர்வு செய்து சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றுள்ளதால், நியூயார்க்கில் ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்