டப்ளின்: தன்னை வளர்த்து வந்த உரிமையாளர் வேறு ஒருவரிடம் தன்னை விற்றதை விரும்பாத நாய் ஒன்று, புது ஓனர் வீட்டிலிருந்து வெளியேறி 64 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே வந்து தனது பழைய உரிமையாளரிடமே வந்து சேர்ந்த செயல் அயர்லாந்து நாட்டை வியக்க வைத்துள்ளது.
நாயை விட யாரும் சிறப்பான முறையில் அன்பையும், பாசத்தையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்த முடியாது என்று சொல்வார்கள். அதை உண்மையாக்கியுள்ளது அயர்லாந்தைச் சேர்ந்த கோல்டன் ரீட்ரீவர் ரக நாய் ஒன்று.
அந்த நாயின் பெயர் கூப்பர். லன்டன்டெர்ரி என்ற பகுதியில் உள்ள டோபர்மோர் என்ற இடத்தில் இது வளர்ந்து வந்தது. ஆனால் இதன் உரிமையாளர், கூப்பரை, வடக்கு அயர்லாந்தின் டைரோன் என்ற நகரைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் கூப்பருக்கு இது பிடிக்கவில்லை. தன்னை வளர்த்து வந்த உரிமையாளரைப் பிரிய முடியாமல் தவித்தது. கத்திப் பார்த்தும் கூட பலன் தரவில்லை.
புதிய உரிமையாளர் கூப்பரை தனது வீட்டுக்குக் கொண்டு வந்தார். அங்கும் இருப்பு கொள்ள முடியாமல் தவித்து வந்தது கூப்பர். இந்த நிலையில், கூப்பர் தனது புதிய வீட்டிலிருந்து நைசாக வெளியேறியது. அங்கிருந்து தனது பழைய வீட்டுக்கு நடக்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழைய வீட்டுக்கு அது நடந்தும்,ஓடியுமாக வந்து சேர்ந்தது. புதிய வீட்டுக்குப் போன கூப்பர் திடீரென வீட்டுக்கு வந்து நிற்பதைப் பார்த்து அதன் பழைய உரிமையாளர் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தார்.
புதிய வீட்டிலிருந்து பழைய வீட்டுக்கு வர அந்த நாய்க்கு ஒரு மாத காலம் பிடித்துள்ளது. அங்குமிங்குமாக அலைந்து திரிந்து தனது பழைய வீட்டைக் கண்டுபிடித்து கூப்பர் நாய் வந்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. பகல் நேரங்களில் கூப்பர் ஆங்காங்கே தங்கியுள்ளது. இரவில் மட்டும்தான் அது பயணித்துள்ளது. யாருடைய உதவியும் இல்லாமல் தனது பழைய உரிமையாளர் வீட்டுக்கு அது வந்து சேர்ந்துள்ளது.
கூப்பரின் புதிய உரிமையாளர் நிகல் பிளமிங் இதுகுறித்துக் கூறுகையில், கூப்பர் பத்திரமாக இருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். தற்போது கூப்பர் மிகவும் பலவீனமாக இருக்கிறது. மெல்ல மெல்ல சாப்பிடுகிறது. விரைவில் அது நலமாகும் என்று நம்புகிறேன் என்றார்.
நன்றியிலும், பாசத்திலும்.. மனிதர்களை விட நாய்கள் பல மடங்கு உயர்ந்தவைதான்.. கூப்பர் அதைத்தான் நிரூபித்துள்ளது.
Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
{{comments.comment}}