நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் எம்பி.. இத்தாலியில்!

Jun 08, 2023,10:50 AM IST

ரோம் : இத்தாலிய பார்லிமென்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக பெண் எம்பி ஒருவர் தனது கைக்குழந்தையுடன் பார்லிமென்ட்டிற்கு வந்துள்ளார். எம்பி.,யாகவும், தாயாகவும் தனது கடமையை சரியாக நிறைவேற்றிய அவருக்கு சக உறுப்பினர்கள் சுற்றி நின்று கைதட்டி பாராட்டினர்.

பெண் எம்பி.,க்கள் கையில் குழந்தையுடன் பார்லிமென்டிற்கு வருவது தற்போது பல நாடுகளிலும் நடக்கிறது. ஆனால் பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் நிறைந்த இத்தாலியில் நடந்துள்ளது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதற்கு காரணம். 



இத்தாலி பார்லிமென்ட்டின் கீழ் சபை எம்பி.,யாக உள்ள கில்டா ஸ்போர்டிலோ தனது மகன் ஃபெட்ரிகோவுடன் பார்லிமென்ட் கூட்டத்திற்கு வந்துள்ளார். அங்கு தனது பணிக்க நடுவே தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கவனித்துக் கொண்டுள்ளார். இதை கண்ட சபையில் இருந்த மற்ற உறுப்பினர்கள் அவரை சுற்றி நின்று கைதட்டி, பாராட்டு தெரிவித்துள்ளனர். அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் கில்டாவை பாராட்டியதுடன் குழந்தையையும் நீண்ட காலம் வாழ வாழ்த்தி உள்ளனர்.

பார்லிமென்ட்டில் சத்தமாக பேசியதால் தான் குழந்தை அழுதுள்ளது. அதனால் தாங்கள் இப்போது அமைதியாக பேசுவதாக பார்லிமென்ட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

ஒரு வயதிற்குள்ளாக இருக்கும் குழந்தைகளை பெண் உறுப்பினர்கள் தங்களின் பணியின் போது உடல் எடுத்து வரலாம், தாய்ப்பால் கொடுத்து கவனித்துக் கொள்ளலாம் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலி பார்லிமென்ட் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. எம்பி.,க்களில் மூன்றில் இரண���டு பங்கு ஆண் உறுப்பினர்கள் இருக்கும் சபையில் இத்தாலியின் முதல் பெண் பிரதமராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜார்ஜியா மெலோனி பதவியேற்றுக் கொண்டார்.

பணியிடத்திற்கு பெண்கள் குழந்தைகளை எடுத்துச் செல்ல முடியாது என்பதால் பல பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதையே நிறுத்தி விட்டனர். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன் என கில்டா உறுதியாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்