"ஈராக் போரில் தோல்வி அடைகிறார் புடின்".. உளறிய அமெரிக்க அதிபர்.. மக்கள் ஷாக்!

Jun 29, 2023,09:43 AM IST
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உடல் நலம் குறித்த கேள்விகள் சமீப காலமாக வலுத்து வரும் நிலையில் அவர் வாய் தவறி ஈராக் போரில் புடின் தோற்று வருவதாக கூறியது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அதிபர் புடின் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வயதான அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர். அவருக்கு 80 வயதாகிறது. நல்ல உடல் நலத்துடன் அவர் இருப்பதாக கூறப்பட்டாலும் கூட அவரது செயல்பாடுகள் அவ்வப்போது விவாதங்களை எழுப்புகின்றன. சமீபத்தில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். மீண்டும் எழுந்திருக்க அவர் மிகவும் சிரமப்பட்டார். பாதுகாவலர்கள்தான் தூக்கி விட்டனர்.



இந்த நிலையில் உக்ரைன் போர் என்பதற்குப் பதில் ஈராக் போர் என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பைடன். சிகாகோ செல்வதற்கு முன்பு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன் கூறுகையில்,  போரில் விலாடிமிர் புடின் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை துல்லியமாக சொல்வது கடினம். ஆனால் அவர்  ஈராக் போரில் நிச்சயம் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். உள்நாட்டில் அவருக்கு தோல்வி கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் அவரை வெறுக்கிறார்கள். நேட்டோ மட்டுமல்ல, ஐரோப்பிய யூனியன் மட்டுமல்ல, ஜப்பான் மட்டுமல்ல.. மொத்த உலகமும் அவரை வெறுக்கிறார்கள் என்றார் அவர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2வது முறையாக உளறியுள்ளார் ஜோ பைடன். ஒரு நிதி சேகரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்வதற்குப் பதில் சீன பிரதமர் என்று கூறிவிட்டார். இப்போது ஈராக் போர் என்று பேசியுள்ளார்.

பைடனின் வயதும், வயோதிகமும் அமெரிக்கர்களிடையே தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகிறது. அவர் தடுமாறி விழுவதும், தவறுதலாக பேசுவதும் இயல்பானதல்ல என்றும் பலர் கருதுகிறார்கள். அதிபர் பதவியை சிறப்பாக பைடனால் செய்ய முடியாது என்று 73 சதவீதம் பேர் கருதுவதாக ராய்ட்டர்ஸ் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பு ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்