தலைவரே.. நல்லா வாயில வர்ற மாதிரி பெயர் வைங்க!

Jul 10, 2023,10:45 AM IST
சென்னை: காலையிலேயே டென்ஷனா இருக்கா.. எதுக்குங்க டென்ஷன்.. அதுக்குத்தான் நாங்க இருக்கோம்ல.. எதுக்கு அதிகப்படுத்தவா??.. அட அப்படி இல்லீங்க பாஸ்.. ஜாலியா நாலு ஜோக்ஸ் சொல்றோம்.. கலகலன்னு கேட்டுட்டு.. பளபளன்னு சுறுசுறுப்பா வேலை பாருங்க வாங்க..!

வாயில வர்ற மாதிரி பெயர் வைங்க



தொண்டர் : தலைவரே! என் பிள்ளைக்கு நீங்க தான் ஒரு நல்ல பெயர் வைக்கணும்.
தலைவர் : எப்படிப்பட்ட பெயரை எதிர்பார்க்குறே?
தொண்டர் : இப்போ டிரெண்டிங்ல இருக்க, வாயில வர மாதிரி பெயர் வைங்க தலைவரே.
தலைவர் : தக்காளி
தொண்டர் : !!!????

ஏங்க நாம இப்படி பண்ணலாமா

மனைவி: ஏங்க நமக்குள்ள ஒரு போட்டி.. நீங்க ரெடியா
கணவன்: நான் ஆல்வேஸ் ரெடிதான் டார்லிங்
மனைவி: சரி.. நான் பாலை வச்சு பால்கோவா பண்றேன்.. நீங்க ரசத்தை வச்சு ரசகுல்லா பண்றீங்களா!
கணவன்: என்னா..னா..னா....து!



ஏற்கனவே போனதுக்காகத்தான் சண்டையே!

மனைவி: ஏங்க பக்கத்துல என்னங்க ஒரே சண்டையா இருக்கு.
கணவன்: அதுவா.. பொண்டாட்டியை போட்டு வறுத்தெடுத்திட்டிருக்கான் புருஷன்.
மனைவி: என்னங்க அநியாயமா இருக்கு.. போய் ஒரு தடவை போய் என்னான்னு கேட்டு விலக்கி விட்டுட்டு வாங்களேன்
கணவன்: ம்க்கும்.. ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே!




அப்பா சொல்லிருக்காரு மச்சி!

ரமேஷ்: ஏன்டா நீயும் பல தடவை ஜோக் எழுதுறேன்னு சொல்லி காட்டுறே.. ஆனா சிரிப்பே வர மாட்டேங்குதே
மகேஷ்: பிறர் சிரிக்கும்படி எதையும் செய்யாதேன்னு எங்க அப்பா சொல்லிருக்காரு டா!

அங்கு சாமி.. அப்ப இங்க!!

மேனேஜர்: வாங்க சார்.. உங்க பேரு என்ன
வந்தவர்: "அங்கு" சாமி
மேனேஜர்: சரி.. அப்ப இங்க???

சமீபத்திய செய்திகள்

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்