நாகோவன்: அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஜுன்மோனி ரபா, சாலை விபத்தில் கொல்லப்பட்டார்.
லேடி சிங்கம் என்றும் டபாங் போலீஸ் என்றும் பிரபலமானவர் ஜுன்மோனி ரபா. பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். நேற்று அவர் நாகோவன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பலியானார். அவர் பயணம் செய்த கார் மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் ஜுன்மோனி ரபா கொல்லப்பட்டார்.
அந்தக் காரில் ஜுன்மோனி மட்டுமே இருந்துள்ளார். சீருடையில் இல்லாமல் காரில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். சருபுகியா என்ற இடத்தில் விபத்து நடந்தது. கார் மோதிய லாரி, உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்ததாகும். விபத்துக்குப் பின்னர் கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல், சீருடையும் இல்லாமல் தனியாக தான் மட்டும் ரபா சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவர் பயணித்தது அரசு கார் அல்ல, அவரது சொந்தக் காராகும். அப்பர் அஸ்ஸாம் பகுதியை நோக்கி அவர் போயுள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் கூட தகவல் தெரிவிக்கவில்லையாம்.
ரபா கிரிமினல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தார். குறிப்பாக நிதி முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது ஈவு இரக்கமின்றி கடுமையாக நடந்து கொள்வார். மோரிகோலங் காவல் நிலையத்தில் அவர் பணியாற்றி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவர் மீது ஊழல் புகார் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு சஸ்பென்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார்.
ஆனால் மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கினார். பாஜக எம்எல்ஏ அமியா குமார் பூயானுடன் அவர் தொலைபேசியில் காரசாரமாக பேசிய ஆடியோ லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார். இது விபத்துதானா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}