மாதவன் மகனா கொக்கா.. நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்களை வென்று அசத்தல்!

Feb 12, 2023,03:00 PM IST
மும்பை : மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற Khelo India Youth games 2022 போட்டியின் நீச்சல் பிரிவில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் 5 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளி பதக்கங்களையும் வென்றுள்ளார். 

டைரக்டர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் மாதவன். இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்கள், வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் படத்தின் மூலம் டைரக்டராகவும் அறிமுகமானார் மாதவன்.



மாதவனின் மகன் வேதாந்த், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளான். தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற  Khelo India Youth games 2022 விளையாட்டு போட்டிகளின் நீச்சல் பிரிவில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் பிரிவுகளில் தங்க பதக்கமும், 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் பிரிவுகளில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். 

இதை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார். வேதாந்த்தின் இந்த சாதனையை பார்த்து விட்டு நெட்டிசன்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டுத் துறை பிரபலங்கள் என பலரும் வேதாத்திற்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் இளம் நீச்சல் வீரர்களில் ஒருவராக வேதாந்த் இருந்து வருகிறார். உள்ளூர், உள்நாடு, சர்வதேச அளவிலான பல போட்டிகளில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். 2021 ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற Lativa Open போட்டிகளில் பங்கேற்ற வேதாந்த் 4 தங்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்றார். கடந்த ஆண்டின் ஜூனியர் நேஷனல் அக்குவாடிக் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வேதாந்த் பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

news

மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்