லிப்லாக் முத்தம்...30 வருட கொள்கையை கைவிட்ட கஜோல்...அதிர்ச்சியில் ரசிகர்கள்

Jul 17, 2023,01:11 PM IST

மும்பை : பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருக்கும் கஜோல், எத்தனை இளம் நடிகைகள் வந்தாலும் கடந்த 30 வருடங்களாக பலரின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 1992 ம் ஆண்டு Bekhudi என்ற படத்தின் மூலம் நடிக்க வந்த கஜோல், பாலிவுட்டின் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

இந்தி மட்டுமின்றி தமிழிலும் மின்சார கனவு படத்தின் மூலம் அறிமுகமாகி, ஒரே படத்தில் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் கிறங்க வைத்தவர். பல ஆண்டுகளுக்கு பிறகு விஐபி 2 படத்தில் வில்லியாக நடித்த போதும் அதே வரவேற்பு அவருக்கு ரசிகர்களிடம் இருந்தது. கவர்ச்சிகரமான தோற்றம், காந்தம் போன்று ஈர்க்கும் கண்களை கொண்ட கஜோல் முன்னணி நடிகையாக இருந்த போதிலும் முத்தக்காட்சிகள், நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதை கொள்கையாக வைத்திருந்தார்.



இதுவரை 1992 ம் ஆண்டு தனது முதல் படமான Bekhudi படத்திலும், 1994 ல் நடித்த Yeh Dillagi என்ற படத்திலும் மட்டுமே அவர் முத்தக்காட்சிகளில் நடித்துள்ளார். அதற்கு பிறகு தனது கணவர் அஜய் தேவ்கனுடன் கூட நெருக்கமான சீன்களில், முத்தக் காட்சிகளில் கஜோல் நடித்தது கிடையாது. கிட்டதட்ட 30 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் இந்த கொள்கையை தற்போது உடைத்துள்ளார் கஜோல். இது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 

ஒரு காலத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்த கஜோல், தற்போது விளம்பரங்கள், வெப் சீரிஸ்களில் அதிகம் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் நடித்த Lust stories 2 என்ற வெப்சீரிஸ் நெட்ஃபிளிக்சில் ஒளிபரப்பானது. தற்போது The trail என்ற வெப் சீரிசில் நடித்து வருகிறார். இது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் லீட் ரோலில் நடித்து வரும் கஜோல், அலாய் கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

ஊழல் மற்றும் பாலில் புகார்களில் சிக்கி கணவர் சிறைக்கு சென்று விட்டதால் குடும்பம் முழுவதையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு கஜோலுக்கு வருகிறது. பொறுப்பான குடும்ப தலைவியாக நடித்துள்ள கஜோல், அலாய் கானுடன் லிப்லாக் முத்தக் காட்சிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் மற்றொரு வெப் சீரிசில் ஜீஸ்சு சென்குப்தாவுடனும் நெருக்கமான சீன்களிலும், முத்தகாட்சிகளிலும் நடித்துள்ளார்.

இந்த இரண்டு சீரிஸ்களின் சீன்கள் தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகின்றன. கஜோலா இது ? ஏன் இந்த திடீரெ மாற்றம்? அஜய் தேவ்கன் இதற்கு எதுவும் சொல்லவில்லையா? சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த காலத்தில் கொள்கையுடன் இருந்த கஜோலா இது? 48 வயதில் இப்படி முத்தக்காட்சிகளில் தத்ரூபமாக செம கிலுகிலுப்பாக நடித்துள்ளாரே என தங்களின் அதிர்ச்சியை கமெண்ட்களில் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்