என்னது.. நாயகன் 2 வர போகுதா?.. "வேலு நாயக்கர்" கொடுத்த ஹாட் அப்டேட்!

May 30, 2023,03:14 PM IST
சென்னை : நாயகன் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக உலா வந்து கொண்டிருக்கும் தகவல் உண்மை தானா என்பது பற்றி செம ஹாட் அப்டேட் ஒன்றை கமலே தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அபுதாபியில் நடந்த சர்வதேச இந்திய சினிமா திரைப்பட விருதுகள் விழா பாலிவுட் சார்பில் நடத்தப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் மிகச் சிறந்த சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கமலுக்கு வழங்கினார். கடந்த ஆண்டு இதை விருதினை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார். 



இந்த விழாவில் சிறந்த டைரக்டருக்கான விருதினை ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் படத்திற்காக நடிகர் மாதவன் பெற்றார். சிறந்த நடிகர் விருதினை விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த ஹிருத்திக் ரோஷன் பெற்றார். ஆலியா பட் நடித்த கங்குபாய் கைகுவாய்டி படம் ஏராளமான விருதுகளை வாரி குவித்தது. த்ரிஷ்யம் 2, பிரம்மாஸ்திரா பார்ட் ஒன் ஆகிய படங்களும் அதிக விருதுகளை வென்றன.

இந்த விழாவிற்கு பிறகு கமல் அளித்த பேட்டியில், கமலஹாசன் 234 படத்தில் கமல் - மணிரத்னம் கூட்டணி இணைய உள்ளதாகவும்,  இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறதே அது உண்மையா என கேட்கப்பட்டது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த கேள்விக்கு பதிலளித்த கமல், அதற்கான வேலைகளை செய்து வருகிறோம். ஆனால் உங்களின் எதிர்பார்ப்பு எங்களை பதற்றமடைய வைக்கிறது. இருந்தாலம் எங்களை அமைதிப்படுத்திக் கொண்டு, முதல் படமான நாயகனை எப்படி செய்தோமோ அதே போல் இந்த படத்தையும் கொண்டு வர பணியாற்றி வருகிறோம் என்றார். கமலின் இந்த வார்த்தை ரசிகர்களை செம உற்சாகமாக்கி உள்ளது.

இதனையடுத்து புதிய தகவல் ஒன்றும் பரவி வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் -  கமல் இணையும் படம் நாயகன் 2 ஆக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் பெரும்பாலும் கேங்ஸ்டர் படமாக தான் இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

ஷங்கர் இயக்கத்தில் தற்போது கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளதாகவும், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கமல் தனது புதிய படத்தின் வேலைகளை துவங்குவார் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. இந்த புதிய இடத்தை இயக்க போவதாக பல இளம் டைரக்டர்களின் பெயர்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், மணிரத்னத்துடன் மீண்டும் கைகோர்க்க உள்ளதாக கமலே கன்ஃபார்ம் செய்துள்ளார். 

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படம் 1987 ம் ஆண்டு ரிலீசானது. மெகா பிளாக்பஸ்டர் படமான அதற்கு பிறகு இந்த கூட்டணி ஒரு படத்தில் கூட இணையவில்லை. சமீபத்தில் தான் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கி உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி முடித்துள்ள மணிரத்னம் அடுத்த அதிரடிக்கு தயாராகி வருவதால் இந்த படம் பற்றிய அடுத்த அப்டேட் எப்போ வரும் என காத்திருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்