கர்நாடக தேர்தல் பிரச்சாரம்.. காங்கிரஸுக்குக் "கை" கொடுக்க செல்கிறார்.. கமல்ஹாசன்!

Apr 29, 2023,09:49 AM IST
சென்னை: கர்நாடக சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் செல்லவுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் சமீப காலமாக நெருக்கம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். ராகுல்காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையின்போது டெல்லிக்குச் சென்று ராகுல் காந்தியுடன் நடந்தார். ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக பிரச்சாரம் செய்தார்.



அதேபோல திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னையில் நடந்த புகைப்படக் கண்காட்சியை கமல்ஹாசன்தான் தொடங்கி வைத்தார். சென்னையில் தொடங்கி பல்வேறு ஊர்களிலும் இந்த புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. 

இந்த நிலையில் தற்போது கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்யப் போகிறார் கமல்ஹாசன்.  மே முதல் வாரத்தில் கமல்ஹாசன் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்று தெரிகிறது. கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தாராம். அதை ஏற்று கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

ஏற்கனவே பல்வேறு கன்னட நடிகர்கள் பாஜகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கிச்சா சுதீப், தர்ஷன் போன்றோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டிலிருந்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யப் போகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்