இவர் இதையும் விட்டு வைக்கலியா?. .கமலை பார்த்து பொறமைப்படும் ரசிகர்கள்

May 29, 2023,04:44 PM IST
சென்னை : தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா உலகிலேயே கமல்ஹாசனுக்கு என்று மிகப் பெரிய பெயர் உண்டு. டான்ஸ், பாட்டு, எழுத்து, இயக்கம், தொழில்நுட்பம், நடிப்பு என பல துறைகளும் தலைசிறந்த கலைஞராக விளங்குபவர் கமல். சினிமாவை தாண்டி அரசியல், ஃபேஷன், சினிமா தயாரிப்பு என பலவற்றிலும் கலக்கி வருகிறார்.

இவர் தற்போது டைரக்டர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஜூன் மாதத்துடன் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புக்கள் முழுவதுமாக நிறைவு செய்ய உள்ளார் கமல். அதற்கு பிறகு புதிய பட வேலைகளை துவங்குவதற்கு முன் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் இந்த போட்டிகள் ஜூலை மாதம் முதல் துவங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.



இதற்கிடையில் கமல் அடுத்ததாக நடிக்க உள்ள கமலஹாசன் 234 படத்தை மணிரத்னம் இயக்க போவதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. அதே சமயம், கமலின் அடுத்த படத்தை இயக்க ஹச்.வினோத், வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோரிடம் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் கமலின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வரும் என ரசிக்ரகள் ஆர்வமாக காத்திருக்கிறார்.

ஆனால் கமல் கடந்த சில வாரங்களாக சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். கையில் கேமிராவுடன் இருக்கும் தன்னுடைய போட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். லேட்டஸ்டாக வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் லுக்கில் இருக்கும் போட்டோக்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் கமல்.அதோடு தான் நடத்தும் கதர் ஃபேஷன் நிறுவனத்திற்காக கலக்கல் போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார். 

கமலின் இந்த புதிய போட்டோகிராஃபர் அவதாரத்தை பார்த்த ரசிகர்கள் பலர், இவர் இதையும் விட்டு வைக்கவில்லையா? இவர் தடம் பதிக்காத துறையே இருக்காது போலவே. எப்படி இவரால் மட்டும் இத்தனை துறைகளில் திறமைசாலியாக இருக்க முடிகிறது என கொஞ்சம் பொறாமை பொங்க, அதே சமயம் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்