அபர்ணா பாலமுரளியின் தோளில் கை போட முயன்ற மாணவர் சஸ்பெண்ட்

Jan 21, 2023,11:06 AM IST
திருவனந்தபுரம் : போட்டோ எடுக்க வந்து, நடிகை அபர்ணா பாலமுரளியின் தோளில் கை போட முயன்ற இளைஞரை சஸ்பெண்ட் செய்து கேரள சட்டக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.



தமிழ், மலையாளம் ஆகிய மொழி சினிமாக்களில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அபர்ணா பாலமுரளி. இவர் தமிழில் சூர்யா நடித்து, சர்வதேச விருதுகள் பலவற்றை வென்று, ஆஸ்கார் வரை சென்று சூரரைப் போற்று படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். இவர் தற்போது மலையாளத்தில் தன்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி அபர்ணா பாலமுரளியும் கலந்து கொண்டார். அப்போது போட்டோ எடுத்துக் கொள்வதற்காக மேடைக்கு வந்த இளைஞர் ஒருவர், அபர்ணா பாலமுரளியின் தோளில் கைபோட்டு, போஸ் கொடுக்க முயன்றார். ஆனால் அவரிடம் இருந்து தப்பிய அபர்ணா, அவருடன் போட்டோ எடுக்க மறுத்து விட்டார்.

இருந்தாலும் விடாத அந்த இளைஞர், மீண்டும் மேடைக்கு வந்து அபர்ணா பாலமுரளியிடம் கை குலுக்க முயன்றார். அதற்கும் அவர் மறுத்து விட்டார். இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சட்டக் கல்லூரி மாணவர் விஷ்ணுவை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்வதாக சட்டக்கல்லூரி பணியாளர் கவுன்சில் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்